News April 9, 2025

ராணிப்பேட்டை: மணியோசை தரும் பாறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாக காஞ்சனகிரி மலைக்கோயில் உள்ளது.1008 சுயம்பு லிங்கங்கள் உள்ள இங்கு மணிப்பாறை எனும் இடம் உள்ளது. இந்த மணிப்பாறையில் கல்லை வைத்து தட்டினால் மணியோசை கேட்பதால் இங்கு வருபவர்கள் இதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இயற்கை சூழ்ந்த காஞ்சனகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News April 17, 2025

வேலை தேடும் ராணிப்பேட்டை இளைஞர்கள் கவனத்திற்கு

image

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 322 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<> லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

அதிவேக வாகனங்களுக்கு அபராதம்- உஷார்

image

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ரேடார் கருவி மூலம் கண்காணித்து, இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கையை ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. மோகன் மேற்கொண்டுள்ளார். வாகன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகிறது. விபத்துகளைத் தடுக்கும் முயற்சியாக இதை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!