News January 15, 2026
ராணிப்பேட்டை: போதையில் கணவன் வெறிச்செயல்!

கலவையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ஆறுமுகம் (65). இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டில் போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் மனைவியின் கையை வெட்டினார். இதனால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
Similar News
News February 13, 2026
ராணிப்பேட்டை: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 13, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 13, 2026
ராணிப்பேட்டை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

ராணிப்பேட்டை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க


