News April 22, 2024

ராணிப்பேட்டை: பைக்கில் சென்ற பெண் பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மீனா(45). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று உறவினர்களுடன் பைக்கில் செல்லும்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் மீனா தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.21) உயிரிழந்துள்ளார்.

Similar News

News January 29, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-28) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 28, 2026

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!