News January 24, 2026

ராணிப்பேட்டை பெற்றோர் கவனத்திற்கு!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். *மறக்காம ஷேர் பண்ணுங்க*

Similar News

News February 6, 2026

ராணிப்பேட்டை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

ராணிப்பேட்டை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க..!

News February 6, 2026

ராணிப்பேட்டையில் நாளங்காடி திறப்பு

image

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடியை நேற்று (பிப்.5) காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள இந்த நாளங்காடியில் சில்லறை, மொத்த வியாபார கடைகள், குளிர்சாதன கிடங்கு, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

News February 6, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

புலிவலம் பகுதியில் நேற்று (பிப்.5) இரவு புல்லட் ஒன்று புதரில் விழுந்து கிடந்தது. இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அந்நபர் இன்று (பிப்.6) உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் விசாரித்ததில் அந்நபர் நந்திமங்கலத்தை சேர்ந்த முருகன் (42) என்பது தெரிய வந்தது.

error: Content is protected !!