News January 28, 2026

ராணிப்பேட்டை: பெற்றோர்கள் கவனத்திற்கு! (அவசியம்)

image

ராணிப்பேட்டையில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 31, 2026

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் இயங்காது!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று(30.01.2026) காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். ​மேலும், வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(பிப்.1) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

News January 31, 2026

ராணிப்பேட்டையில் பெண் துடிதுடித்து பலி!

image

பின்னாவரம் கிராமத்தில் நேற்று(ஜன.30) அரக்கோணம் – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் இறந்தார். நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

image

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!