News February 23, 2026
ராணிப்பேட்டை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். SHARE IT
Similar News
News February 28, 2026
ராணிப்பேட்டை: துடிதுடித்து பலி

ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் சபீர் திமிரி வழியாகச் சென்றபோது மருத்துவம்பாடி அருகே அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திமிரி காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (பிப்-27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது <


