News July 6, 2025

ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை !

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகாலா உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, நாளை (ஜூலை 7) சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News July 6, 2025

அரக்கோணம் – சேலம் மெமு ரயில் ரத்து

image

அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு சேலம் செல்லும் பயணிகள் ரயில் (ஜூன்23-ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. காலை வேலைக்கு கல்லூரிக்கு செல்வோர் இந்த ரயில் மூலம் பயணித்தனர் வந்தனர். திடீர் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள் ஆகியுள்ளனர். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், இந்த ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

News July 6, 2025

ராணிப்பேட்டை மக்களே! உங்களுக்கு தான் இந்த செய்தி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஜூலை 7) வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இணையதள மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனுப்பப்படும் இணைப்புகள் மற்றும் கோப்புகளை திறக்கும் போது கவனம் தேவை. வலுவான கடவுச்சொல் பயன்படுத்தி, ஆன்லைன் கோரிக்கைகளை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான செயல்களை 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என் தெரிவித்துள்ளது.

News July 6, 2025

ராணிப்பேட்டையில் விவசாய மருந்து விலை குறைவு

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சியியல் தடுப்பு மருந்துகளின் விலை இன்று சற்று குறைவடைந்துள்ளது. குறிப்பாக, 1 லிட்டர் மருந்து ரூ.15 முதல் ரூ.25 வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விலை குறைவால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து, இது சாகுபடிக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!