News November 4, 2025

ராணிப்பேட்டை நிர்வாகிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நேற்று (நவ.03) நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின் அமைச்சர் காந்தி, எம்.பி.ஜெகத்ரட்சகன், ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் உடன் பங்கேற்றனர்.

Similar News

News November 4, 2025

ராணிப்பேட்டை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

image

ராணிப்பேட்டையில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

ராணிப்பேட்டை: முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை

image

ராணிப்பேட்டை,பெருமாள்ராஜபேட்டை ஆர்.என். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஹரி வெங்கடேஷ் 65. நேற்று நவ.03ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஹரி வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 4, 2025

ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!