News June 14, 2024
ராணிப்பேட்டை: நண்பரை அடித்த கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

ராணிப்பேட்டை, வாலாஜா, பில்லியப்பா நகரைச் சேர்ந்தவர் ரகோத்தமன் (54). பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரனின் வீட்டில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கட்டையால் தாக்கியதில் ரகோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Similar News
News March 2, 2026
ராணிப்பேட்டை: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04172-299200) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 2, 2026
சோளிங்கர்: முட்டிபோட்டு மலை ஏறிய திமுக பிரமுகர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டி, சோளிங்கரில் திமுக பிரமுகர் விஜய் சாஸ்திரி முட்டிப் போட்டு மலை ஏறி வினோத வழிபாடு நடத்தினார். சோளிங்கர் மத்திய ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் விஜய் சாஸ்திரி, நேற்று (மார்ச் 1) சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் மலைக் கோயிலின் 405 படிகளையும் முட்டிப் போட்டு ஏறிச் சிறப்பு வழிபாடு செய்தார்.


