News December 12, 2025
ராணிப்பேட்டை: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு!

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News March 4, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடைபெறவுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ராணிப்பேட்டை நேரிலோ அல்லது ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
ராணிப்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை!

திமிரி அருகே உள்ள நம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மதன்(17), கோகுல்(15) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மதன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செமெஸ்டர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மதன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!


