News January 5, 2026

ராணிப்பேட்டை: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 6, 2026

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி நடவடிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா-விடம் நேற்று (5.1.2026) சுமித்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்ற ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ரூ.18,000 மதிப்பிலான சக்கர நாற்காலியை அவருக்கு வழங்கினார். இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

News January 6, 2026

தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவருக்கு ஆட்சியர் வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று (06.01.2026) வருகை புரிந்த தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி டாக்டர் வெ. ஆறுச்சாமியை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த ஆய்வின் போது தூய்மைப் பணியாளர்களின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

News January 6, 2026

அரக்கோணம் வழியாக பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் எண்;06034 ஜனவரி 11 மற்றும் 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்குக் கோயம்புத்தூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 9:50 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்றடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

error: Content is protected !!