News January 11, 2026
ராணிப்பேட்டை: தறிகெட்டு ஓடிய கார் – அலறிய மூதாட்டி!

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.10) பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார் ஓட்ட பழகிய பெண் ஒருவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவரின் கால் மீது கார் மோதியது. இதில், மூதாட்டி காலில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 27, 2026
ராணிப்பேட்டை பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

ராணிப்பேட்டை மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 27, 2026
ராணிப்பேட்டை நிறுவனங்களுக்கு அபராதம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று(ஜன.26) குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவைகளை தொழிலாளர் உதவி கமிஷனர் மு.வரதராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தாலுகா போலீசார் நேற்று(ஜன.26) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோணலம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் திரிந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த நேத்ராவதி(37) என்பதும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


