News December 14, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும்- ரூ.96,200 சம்பளம்!

image

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 2, 2026

சோளிங்கர்: முட்டிபோட்டு மலை ஏறிய திமுக பிரமுகர்!

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டி, சோளிங்கரில் திமுக பிரமுகர் விஜய் சாஸ்திரி முட்டிப் போட்டு மலை ஏறி வினோத வழிபாடு நடத்தினார். ​சோளிங்கர் மத்திய ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் விஜய் சாஸ்திரி, நேற்று (மார்ச் 1) சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் மலைக் கோயிலின் 405 படிகளையும் முட்டிப் போட்டு ஏறிச் சிறப்பு வழிபாடு செய்தார்.

News March 2, 2026

வாலாஜா அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

ராணிப்பேட்டை: வாலாஜா தாலுகா அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(49). வேலம் உயர் நிலைப் பள்ளி அலுவலரான இவருக்கு விஜயா(35) என்ற மனைவியும். எத்தீஷ்(10) என்ற மகனும், இனியா(8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செந்தில் குமார், மன வேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தனியார் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News March 2, 2026

அரக்கோணத்தில் ஒருவர் மீது குண்டாஸ்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட முத்து(36) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜம்மாலின் பரிந்துரையின் படி, முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார்.

error: Content is protected !!