News December 24, 2025

ராணிப்பேட்டை: சிறுநீர் கழிக்கச் சென்ற சிறுவன் பலி!

image

ராணிப்பேட்டை: களப்பலாம்பட்டைச் சோ்ந்த சந்தோஷ் (8), 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதற்கிடையே, நேற்று சந்தோஷ், அக்கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சிறுநீா் கழித்துள்ளாா். அப்போது தவறி பள்ளத்தில் விழுந்ததில் அதில் இருந்த நீரில் மூழ்கி சந்தோஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து நெமிலி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Similar News

News December 25, 2025

ராணிப்பேட்டை: விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற டிச-30ம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

ராணிப்பேட்டை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 25, 2025

ராணிப்பேட்டை அருகே கோயிலுக்கு சென்ற பஸ் விபத்து!

image

கந்திலி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் அருகே, நேற்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பின், வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளானர். இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!