News November 7, 2025
ராணிப்பேட்டை: சாக்லேட் மாலையில் சாய் பாபா

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருள்மிகு ஸ்ரீ அருணாச்சல பாபா சமஸ்தானம் ஆலயத்தில் நேற்று (நவ.06) வியாழக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மலர் மாலை மற்றும் சாக்லேட் மாலை அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News January 29, 2026
அரக்கோணத்தில் இருளில் மூழ்கிய மக்கள்!

ராணிப்பேட்டை; அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டை, பால கிருஷ்ணாபுரம், முசல் நாயுடு கண்டிகை, அரக்கோணம் நகர எல்லை பகுதிகளான ராகவேந்திரா நகர், நாகம்மாள் நகர், கைனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று(ஜன.28) மாலை மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரமாக அப்பகுதிகள் இருளில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வேடல் – மின்னல் சாலை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்தி நகர் பகுதியில் 2 வாலிபர்களிடம் மடக்கி விசாரித்ததில், அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே நேதாஜி(29), கோடீஸ்வரன்(22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 29, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-28) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


