News September 26, 2025

ராணிப்பேட்டை: சர்ச்சையான வைரல் போஸ்டர்

image

அரக்கோணத்தில் ரோபோ சங்கரின் மறைவை குறிப்பிட்டு மது விழிப்புணர்வு பேரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. அதில் ‘எனக்கு மொழி, இனம், சாதி, மதம், நாடு, ஆண், பெண், இரவு, பகல், சின்னவன், பெரியவன், ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, அதிபதி, போண்டி, சர்வாதி, அடிமை இவற்றை எனக்கு பிரித்து பார்க்க தெரியாது. என்னைத் தொட்டான் அவன் கெட்டான்’ என்ற வாசகம் உள்ள நிலையில், சர்ச்சையாகியுள்ளது.

Similar News

News February 3, 2026

ராணிப்பேட்டை: ஊர் ஊராய் திருட்டு; கடைசியில் ட்விஸ்ட்!

image

அரக்கோணத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில் சந்தேகத்திற்கு இடமான 2 வாலிபர்களை விசாரித்தனர். இதில் வேலூரை சேர்ந்த பரமேஸ்வரன் (28) மற்றும் கார்த்திக் (37) பல நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலையில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதும், வாகனங்களை ரூ.5,000- 10,000-த்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது பற்றிய CCTV காட்சிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 3, 2026

ராணிப்பேட்டையில் கொடூர தாக்குதல்!

image

மருதம்பாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் மவுண்டன் (33). இவர் நேற்று முன்தினம் ஏகாம்பரநல்லூர் முத்தாலம்மன் கோயில் வழியாக சென்று கொண்டிருந்த போது முன் விரோதம் காரணமாக அவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன் (38), சதீஷ்குமார் (35), நவீன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

News February 3, 2026

ராணிப்பேட்டையில் தூக்கில் தொங்கிய மாணவி!

image

கலவை, இருங்கூரை சேர்ந்த +1 மாணவி மதுமதி. நேற்று முன்தினம் மாணவிக்கு வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. இந்நிலையில் நேற்று (ஜன.2) வீட்டில் தனியாக இருந்த மதுமதி காலை 10 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வாழைப்பந்தல் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!