News February 9, 2025
ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஜான்பால், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி ஆறுமுகம் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இன்று (09.02.2025) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News August 20, 2025
ராணிப்பேட்டையில் இபிஎஸ் சுற்றுப்பயணம்

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.20) ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
ராணிப்பேட்டை: உங்களுக்கு சர்க்கரை நோயா?

ராணிப்பேட்டை மக்களே நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு (SHARE) பண்ணுங்க.
News August 20, 2025
நெமிலியில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை, நெமிலி இன்று (ஆக.19) வடகண்டிகையில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் துணை முகவராக அருண் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார். போலீசார் விசாரணையில், அதிக வட்டி தருவதாக வாக்குறுதியளித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.