News September 15, 2025
ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி மற்றும் அஜய் ஆகிய இருவர் நேற்று (14.9.2025) கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News September 15, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
ராணிப்பேட்டை: ஒற்றை பாறையில் அமைந்த கோயில்

குடைவரை கோயிலுக்கு பெயர் போன பல்லவர்கள் கட்டிய கோயில்களில் ராணிப்பேட்டை மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் தனித்துவமாக உள்ளது. மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட இக்கோயில், வெட்டவெளியில் ஒரு சிறு பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் தனிசிறப்பாக உள்ளது. மேலும் இந்த கோயில் ராணிப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 15, 2025
ராணிப்பேட்டை: மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டையில் இந்த மாதத் திற்கான மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்க இருக்கிறது. நிகழ்வு ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். என ராணிப்பேட்டை செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் கூறினார்.