News October 28, 2025

ராணிப்பேட்டை: காவல்துறையின் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆறுகள், ஏரிகள், குளங்களில் குழந்தைகள் நீந்தச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களில் நீராடும் போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 28, 2025

ராணிப்பேட்டை: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

News October 28, 2025

ராணிப்பேட்டை: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

image

ராணிப்பேட்டை மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.

News October 28, 2025

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்.30ஆம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!