News January 2, 2026

ராணிப்பேட்டை: ஏரியில் மிதந்த ஆண் சடலம்!

image

காவேரிப்பாக்கம் ஏரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த கிரிதரன் (35) என்பவர், திருப்பாற்கடல் கோயிலுக்கு வந்தவர், ஏரியில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரிக்கின்றனர். உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News

News January 6, 2026

ராணிப்பேட்டையில் நாளை மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ராணிப்பேட்டை, முகுந்தராயுபுரம் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (ஜன.3) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட், கல்மேல்குப்பம், வில்வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், மற்றும் கிருஷ்ணாவரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும்.

News January 6, 2026

ஆற்காட்டில் துடிதுடித்து பலி!

image

ஆற்காட்டை அடுத்த கணியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(67). இவரது அனைவி ஜீவா. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், கீழ்விஷாரம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, நெடுஞ்சாலையைக் கடந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பூபாலன் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 6, 2026

எம்.பி. கனிமொழிக்கு ஆர். காந்தி பிறந்தநாள் வாழ்த்து

image

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நேற்று (ஜன.5) ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி, கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்துப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் கட்சி நிற்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

error: Content is protected !!