News October 22, 2025
ராணிப்பேட்டை: ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இன்று (அக்.22) நிலவரப்படி 872.87 கியூசியஸ் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போன்று மகேந்திரவாடி ஏரியில் இருந்து 139.46 கியூசியஸ், சங்கரம்பாடி ஏரிலிருந்து 37.41 கியூசியஸ் தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Similar News
News October 22, 2025
இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401
News October 22, 2025
ராணிப்பேட்டை: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 22, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.