News January 7, 2026

ராணிப்பேட்டை: எமனாக மாறிய ரயிலின் படிக்கட்டு

image

ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சதீஷ் (27), ஈரோட்டில் வேலை தேடிவிட்டு ரயிலில் ஊர் திரும்பியபோது, மேலஆலத்தூர்-குடியாத்தம் இடையே படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது தவறி விழுந்து பலியானார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

ராணிப்பேட்டை: House Owner தொல்லையா? உடனே CALL

image

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT

News January 20, 2026

ராணிப்பேட்டை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி

image

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியதை முன்னிட்டு, ராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்தார். அப்போது பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் மரபை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.

error: Content is protected !!