News August 19, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை நகரில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 29, 2026

ராணிப்பேட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை (ஜன.30) காலை 11 மணி முதல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் களப் பிரச்சனைகளை பொதுக் கோரிக்கையாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

News January 29, 2026

ராணிப்பேட்டையில் TASMAC-களை மூட உத்தரவு!

image

பிப்ரவரி 1ம் தேதி வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் ஹோட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் டிரை டே என அறிவிக்கப்பட்டு மூடப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

ராணிப்பேட்டை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். ராணிப்பேட்டை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!