News August 6, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் புதிய அறிவிப்பு

இன்று ஆகஸ்ட் 6 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெய் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்திற்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
Similar News
News August 7, 2025
ராணிப்பேட்டை: கவலையை தீர்க்கும் சிவன் கோயில்

ஒரு எரிமலை வெடித்த பின்னர் அந்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய மலைதான் ராணிப்பேட்டை, லாலாப்பேட்டை அருகேயுள்ள காஞ்சனகிரி. ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம் மலையிலுள்ள பாறையைத் தட்டிப் பார்த்தால் வெண்கல மணிச் சத்தம் வெளிப்பட்டு எதிரொலிக்கும். இந்த கோயிலுக்கு வந்தால் கஷ்டங்கள் தீர்ந்து கவலைகள் மறையும் என்பது நம்பிக்கை. கவலையில் இருக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 7, 2025
ராணிப்பேட்டை: இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க…!

சர்க்கரை நோயாளிகளுக்காவே அரசு “பாதம் காப்போம்” திட்டதை செயல்படுத்தி வருகிறது. இதில் பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை செலவில்லாமல் இலவசமாக பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டால் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் செயற்கை கால்களை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இதற்கென Diabetic Foot Clinic பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.
News August 7, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “குழந்தையை பள்ளிக்கு அனுப்புவோம்; பள்ளி இல்லாமல் வாழ்க்கை இல்லை” என்ற கோஷத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!