News August 18, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திட்டமில்லா பகுதியில் அமையும் 2011 க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன்முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2025 ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை நகர் ஊரமைப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

Similar News

News November 1, 2025

ராணிப்பேட்டை : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News November 1, 2025

ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

ராணிப்பேட்டை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

ராணிப்பேட்டை – ஒரு பார்வை

image

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.

error: Content is protected !!