News August 7, 2025

ராணிப்பேட்டை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை வேளாண்துறையினரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2WDக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1,700; 4WDக்கு ரூபாய் 2200, செயின் வகை இயந்திரத்திற்கு ரூபாய் 2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 7, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 7, 2025

ராணிப்பேட்டைக்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News August 7, 2025

ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நாளை ஆகஸ்ட் 7 கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் நேரம் காலை 9மணி முதல் மாலை 3மணி வரை. மேல்விஷாரம் MMES விழா மண்டபம் அண்ணா சாலை, வாலாஜா CM மஹால் டி இராமசாமி தெரு, தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியம் பஞ்சாயத் அலுவலகம் கட்டிடம், ஆற்காடு சமுதாயக்கூடம் புதிய தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

error: Content is protected !!