News January 20, 2026
ராணிப்பேட்டை: அழுகிய நிலையில் ஆண் சடலம்!

திமிரி அருகே விலாரி கிராம கூட்ரோடு அருகே முட் புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த திமிரி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அழுகிய நிலையில் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 26, 2026
ராணிப்பேட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம்!

திமிரி அருகே ஆனைமல்லூர், பிள்ளையார் கோயில் தெர்வைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் திவாகன்(32). கட்டடத் தொழிலாளியான இவரிடம் கடந்த 15ஆம் தேதி சம்பாதித்த பணத்தை ராமலிங்கம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் திவாகர் வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி விலாரி கூட்ரோட்டில் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 26, 2026
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஜன.25 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.