News May 28, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (50). அரசு பஸ் கண்டக்டர். இவர் இன்று மதியம் கலவை டவுன் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தருவதற்காக வரும்போது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 3, 2026
அரக்கோணம்: தீ விபத்தில் பள்ளி மாணவன் பலி!

அரக்கோணம் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் செல்வகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மீன் பிடித்து, அதனை சுடுவதற்காக கட்டைகளை அடுக்கி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News January 3, 2026
ராணிப்பேட்டை: இலவச மாதிரி தேர்வு குறித்து அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு (03.01.2026) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல் உடன் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.