News March 26, 2025
ராணிப்பேட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

வாலாஜாவை அடுத்த கத்தாரி குப்பம் கிராம பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (70). இவர் அம்மூர் ரோடு தென்றல் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது பற்றி மேலும் விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை, நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பயன்பாடு மற்றும் மாவட்டத்திலுள்ள முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த அறிக்கை, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்களின் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.
News August 14, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \