News October 26, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து; மரணம் 

image

அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் இன்று பைக்கில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சங்கரன்பாடி கிராமத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மகாலிங்கத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்தார். அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (நவ.11) மாவட்டங்களில் அனைத்து துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்துகொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News November 11, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு!

image

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

News November 11, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் நேரில் ஆய்வு!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (11.11.2025) அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்க நகராட்சி நேதாஜி நகர் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து வருவதை ஆய்வு செய்தார்.

error: Content is protected !!