News March 22, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
Similar News
News September 8, 2025
அறிவித்தார் ராணிப்பேட்டை ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் ரூபாய் 100 பதிவு செய்த பயிர்கள் வெற்றி பெறும் இரண்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் கடைசி தேதி 15.3.2026 மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்
▶ஆர். காந்தி (தி.மு.க) – ராணிப்பேட்டை – 1,03,291 வாக்குகள்
▶எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க) -அரக்கோணம் – 1,11,885 வாக்குகள்
▶ஏ.எம். முனிரத்தினம் (காங்கிரஸ்) -சோளிங்கர் – 1,10,228 வாக்குகள்.
▶ஜே. எல். ஈஸ்வரப்பன் (தி.மு.க) -ஆற்காடு-1,03,885 வாக்குகள்.
ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
ராணிப்பேட்டை உங்களுடன் ஸ்டாலின் முகாமின் விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் நாளை 09.09.2025 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அரக்கோணம் TN நகர், டி. என். நாராயணசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறும். பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து தீர்வு காண்பதே இம்முகாமின் நோக்கமாகும். மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.