News March 29, 2024

ராணிப்பேட்டை அருகே கொள்ளை

image

ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் .நேற்று சென்னையில் உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் கொள்ளை போனது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

அரசு பள்ளி விழாக்களில் திரைப்படப் பாடலுக்கு தடை

image

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவின் போது சாதிய வன்மத்தை தூண்டும் பாடல்கள், கட்சிக் கொடிகள், குறியீடுகள் போன்றவற்றை கொண்டு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும்,  திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதை தடைச் செய்தும் பள்ளி கல்வி துறை இயக்குனர் அதற்கான சுற்று அறிக்கையை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சாதி ரீதியில் நடனமாடியது சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News April 4, 2025

ராணிப்பேட்டையில் பல்லவர் கால குடைவரை

image

திருப்பாண்மலையில் பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!