News January 2, 2026

ராணிப்பேட்டை: அமைச்சர் தலைமையில் நிகழ்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News January 25, 2026

ராணிப்பேட்டை: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

ராணிப்பேட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை எரிவாயு உருளை நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சிலிண்டர் விநியோக சேவை குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, நுகர்வோர் தங்களது புகார்களைத் தெரிவித்து இப்பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 25, 2026

ராணிப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு

image

77-வது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் பேரில் சுமார் 600 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாசவேலை தடுப்பு குழுவினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!