News November 23, 2025
ராணிப்பேட்டையில் FREEஆ காய்கறி வாங்கலாம் ! வாங்க..

நகர்ப்புற மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகளை பயிரிட மாடித் தோட்ட திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் கொண்ட கிட்டை 50% மானியத்தில் பெறலாம். <
Similar News
News January 22, 2026
ராணிப்பேட்டை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஜன 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி – பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.


