News July 10, 2025
ராணிப்பேட்டையில் 800 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பாரத மிகுமின் பெல் நிறுவனத்தின் நிறைவு வாயிலில் எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் முத்துக்கடை பேருந்து நிலையம், ஆற்காடு, கலவை, சோளிங்கர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அந்த வகையில் மறியலில் ஈடுபட்ட 800 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Similar News
News July 10, 2025
இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.
News July 10, 2025
மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வருகின்ற ஜூலை 19 சனி காலை 8:30 முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கலில் உள்ள, ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த (9488466468, 9952493516) எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,03,025டன் நெல் கொள்முதல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடங்கப்பட்டு. 16, 249 விவசாயிகளிடம் இருந்து ரூ.251.986 கோடி மதிப்பிலான, 1,03,025டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.