News March 3, 2026

ராணிப்பேட்டையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

ராணிப்பேட்டை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

Similar News

News March 4, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடைபெறவுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ராணிப்பேட்டை நேரிலோ அல்லது ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

ராணிப்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை!

image

திமிரி அருகே உள்ள நம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மதன்(17), கோகுல்(15) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மதன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செமெஸ்டர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மதன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 4, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!

error: Content is protected !!