News August 9, 2025
ராணிப்பேட்டையில் வீரமரணம் அடைந்த சோழன்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 9, 2025
ராணிப்பேட்டை: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350918>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
ராணிப்பேட்டை: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
ராணிப்பேட்டை ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அந்தந்த வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம், உறுப்பினர் சேர்க்கை, புகைப்பட பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!