News January 12, 2026
ராணிப்பேட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கதிரவன் (18). நேற்று(ஜனவரி 11) தனது வீட்டில் கதிரவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து எதற்காக இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 21, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்களுக்கு கால வரை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
News January 21, 2026
ராணிப்பேட்டையில் கொடூரம்!

கிருஷ்ணாவரத்தில் நேற்று முன்தினம் (ஜன.19) இரவு அடையாளம் தெரியாத நபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவர் செக்கடிகுப்பத்தை சேர்ந்த வெடிங் தொழிலாளி வேலு (40) என தெரியவந்தது. மேலும் உயிரிழந்த வேலு, வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததால் ஆத்திரத்தில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மகன் வேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 21, 2026
ராணிப்பேட்டை: பெண்ணுக்கு எமனாய் வந்த வாகனம்!

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இளம்பெண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த பெண் யார்? மோதிய வாகனம் யாருடையது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


