News July 4, 2025
ராணிப்பேட்டையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சலுகை!

உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினர்களுக்கு, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் திருநங்கையர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 5, 2025
ராணிப்பேட்டையில் ஆட்சியர் அறிவிப்பு

முதியோர்களுக்கான “அன்புச் சோலை” மையங்கள் அமைக்க தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருவின் 2 நகல்களை வரும் ஜூலை 7க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உபயோகம் உள்ளவர்களுக்கு பகிரவும்.
News July 4, 2025
இராணிப்பேட்டை இரவு ரோந்து போலீசார் விவரம்

இராணிப்பேட்ட மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (04/07/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.
News July 4, 2025
ராணிப்பேட்டை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <