News August 8, 2024
ராணிப்பேட்டையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 7, 2025
ராணிப்பேட்டை: திருமணத்திற்கு இலவச தங்கம், நிதி பெறுவது எப்படி?

1) ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2)இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
4)திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.(SHARE IT)
News November 7, 2025
அரக்கோணம்: டிக்கெட்டின்றி பயணித்த 17 பேர்!

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று(நவ.6) டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ததாக 17 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.5000 அபராதமாக வசூலிக்கப்பட்டது .இந்த அதிரடி சோதனை தினமும் தொடரும் என்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில் தெரிவித்தார்.


