News January 7, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (ஜன.8) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாம்பாக்கம், கலவை, திமிரி, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 23, 2026

ராணிப்பேட்டை: கிணற்றில் மிதந்த ஆண் பிணம்!

image

சயனபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தினேஷ் (24). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது தந்தை நேற்று (ஜன.22) நெமிலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 23, 2026

ராணிப்பேட்டை: துடிதுடித்து பலி!

image

கொண்டாபுரம் கிராமத்தில் இன்று (ஜன.22) தேதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 2 பேரை போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டி சென்று வேலூரை சேர்ந்த ஆதித்யன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 23, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன-22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!