News April 3, 2025
ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 4, 2025
ராணிப்பேட்டையில் பல்லவர் கால குடைவரை

திருப்பாண்மலையில் பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 3, 2025
இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு !!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். காவல் என்னை அழைக்கவும் 9884098100
News April 3, 2025
ராணிப்பேட்டை: ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 11 ஆண்கள் & 1 பெண் என மொத்தம் 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றிற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட தளபதி ஊர்க்காவல்படை ராணிப்பேட்டை மாவட்ட அலுவகத்தில் நேரடியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 07.04.2025 முதல் 09.04.2025 வரை 3 நாட்கள் மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். *நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. நண்பர்களுக்கும் பகிரவும்*