News March 23, 2025
ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆக.25) இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 25, 2025
இராணிபேட்டை மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

இராணிப்பேட்டை மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
அரக்கோணத்தில் அதிமுகவினர் கைது

அரக்கோணத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை கண்டித்து இன்று (ஆக.25) தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.