News July 27, 2024
ராணிப்பேட்டையில் போலீஸ் கவாத்து பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது போலீசார் தங்களது உடல் தகுதி திறனை நிரூபிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி போலீசாரின் உடல் தகுதித் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .டிஎஸ்பி வெங்கடேசன் உடன் இருந்தார்
Similar News
News March 3, 2026
ஆற்காடு எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், 2026 தேர்தலில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னையை நோக்கி செல்லும்ரயில்களில் மர்மநபர்கள் சிலர் போதை மாத்திரை கடத்திவருவதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்ததும் ஆகாஷ்(23), மணிகண்டன்(24), தட்சிணாமூர்த்தி(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


