News December 20, 2025
ராணிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கைது

ராணிப்பேட்டையில் பாஜக மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை அங்குள்ள ஒரு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற போது போலீசார் இங்கு தொழுக வேண்டாம். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கருத்தில் கொண்டு போலீசார் தெரிவித்தனர்.ஆனால் வேலூர் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வேன் என்று கட்டாயத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
Similar News
News December 25, 2025
ராணிப்பேட்டைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த..!

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, இன்று(டிச.25) பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாக்கால சாண்டா கிளாஸ் உருவம் & வண்ண அலங்காரங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த வாழ்த்து பதிவு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே அமைதி, ஒற்றுமை & மகிழ்ச்சியை பேண வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
News December 25, 2025
ராணிப்பேட்டை: உடல் நசுங்கி செவிலியர் பலி!

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலைச்செல்வி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சக ஊழியரின் இருசக்கர வாகனத்தை பெற்று காரைக்கூட்டு சாலையில் இருந்து வாலாஜாபேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த அவர், பின்னால் வந்த அரசு பேருந்து ஏற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சமத்துவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அப்பகுதி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.


