News October 15, 2024

ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையிலும் நேற்று இரவு முதல் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் இடையே கேள்வி எழுந்தது. தற்போது, ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

image

இன்று பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாங்கல் பகுதியில் பெரிய அளவிலான கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றி திரிந்த வாலிபரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சோளிங்கரை பகுதியைச் சேர்ந்த சுதன் 24 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.

News August 29, 2025

ராணிப்பேட்டை : B.Sc,B.E.,B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <>கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc,B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

ராணிப்பேட்டை: அமெரிக்காவால் தோல் தொழிலுக்கு சிக்கல்

image

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரியால், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பொருட்களின் வரவேற்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!