News January 25, 2026

ராணிப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு

image

77-வது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் பேரில் சுமார் 600 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாசவேலை தடுப்பு குழுவினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Similar News

News January 27, 2026

ராணிப்பேட்டை நிறுவனங்களுக்கு அபராதம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று(ஜன.26) குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவைகளை தொழிலாளர் உதவி கமிஷனர் மு.வரதராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

அரக்கோணத்தில் அதிரடி கைது!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தாலுகா போலீசார் நேற்று(ஜன.26) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோணலம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் திரிந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த நேத்ராவதி(37) என்பதும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 27, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!