News February 24, 2026
ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் துரை(32). இவரின் மனைவி ஜெயஸ்ரீ(27). இவர், நேற்று முன் தினம் வாலாஜா செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ, பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 24, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றி வந்த, 30 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News February 24, 2026
ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

சிபிஐ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டாம் செய்து பணம் பறிப்பதாக ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், 542 சிம் கார்டுகளை பயன்படுத்தி லட்சக் கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த சிங்கம்பல்லி கணேஷ்(36), பப்பலா கிஷோர் குமார்(36), செல்லா சந்தீப்குமார்(27), சனபதி பிரசாத்(28), தல்லா ராமகிருஷ்ணன்(29) ஆகியோரை கைது செய்தனர்.
News February 23, 2026
ராணிப்பேட்டை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். SHARE IT


