News December 21, 2025
ராணிப்பேட்டையில் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலிண்டர் நுகர்வோர் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறை தீர்வு கூட்டம் வரும் (டிச.30) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெறும், கூட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் சேவைகள் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News December 24, 2025
ராணிப்பேட்டை: சமையல் செய்த மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்!

ராணிப்பேட்டை: கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (80). இவா் திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பட்டதில் உடலில் பரவி கோவிந்தம்மாள் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து சோளிங்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
News December 24, 2025
ராணிப்பேட்டை: சிறுநீர் கழிக்கச் சென்ற சிறுவன் பலி!

ராணிப்பேட்டை: களப்பலாம்பட்டைச் சோ்ந்த சந்தோஷ் (8), 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதற்கிடையே, நேற்று சந்தோஷ், அக்கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சிறுநீா் கழித்துள்ளாா். அப்போது தவறி பள்ளத்தில் விழுந்ததில் அதில் இருந்த நீரில் மூழ்கி சந்தோஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து நெமிலி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
News December 24, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (டிச.23) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!


