News February 13, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டையில் நாடு தழுவிய மறியல் போராட்டத்தின் எதிரொலியாய் நேற்று (பிப்.12) கலவை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மத்திய அரசின் விவசாய தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கலவை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 16, 2026

ராணிப்பேட்டை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

கராத்தே போட்டியில் ராணிப்பேட்டை மாணவர்கள் சாதனை

image

FCKA தேசிய அளவிலான கராத்தே போட்டி நேற்று (பிப். 15) அன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியில், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் கராத்தே பள்ளியின் தலைவர் ஷிஹான் டாக்டர் நவாஸ் தலைமையில் 13 மாணவர்கள் பங்கேற்று 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்றனர்.

News February 16, 2026

ராணிப்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நபர்!

image

ராணிப்பேட்டை, சயனபுரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் முருகேசன்(47). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக இறந்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!